Thursday, March 28, 2024
Homeசிவகங்கைகாரைக்குடி வழியாக சிவகங்கையில் ரயில்கள் செல்ல கார்த்தி சிதம்பரம் எம்பி கோரிக்கை

காரைக்குடி வழியாக சிவகங்கையில் ரயில்கள் செல்ல கார்த்தி சிதம்பரம் எம்பி கோரிக்கை

மலைக்கோட்டை, ஹவுரா எக்ஸ் பிரஸ் ரயில்களை காரைக்குடி வழியாக சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காரைக்குடி ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நடை மேம்பாலம், மின்தூக்கி வசதியை விரைந்து செயல்படுத்தடும் வேண்டும். எனவும் நடைமேடை 1முதல் 4 வரை டிஜிட்டல் தகவல் பலகை வைக்க வேண்டும். அதேபோல், முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டரை தனியாக அமைக்க வேண்டும்.என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

கோரிக்கைகள்

சென்னையில் இருந்து காரைக் குடிவழியாகச்செல்லும்முன்று ரயில்கள், இரவு நேரத்தில் காரைக்குடிக்கு வருகின்றன. இதில் ஒரு ரயிலை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படச் செய்தால், காரைக்குடிக்கு காலை நேரத்தில்தான் வரும். காரைக்குடி-திருவாரூர் ரயில் இருமார்க்கத்திலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.அந்த ரயிலை தினமும் இயக்க வேண்டும்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் மலைக்கோட்டை, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்களை காரைக்குடி வழியாக சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும்.அஜ்மீர் எக்ஸ்பிரஸ், அயோத்யா  ரயில் ஆகியவை காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு 2 ரயில்களும், காரைக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு ரயிலும் புதிதாக இயக்க வேண்டும் இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments