Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்வேளாண்மைத்துறை வருமானத்தை மேம்படுத்த திட்டம் அமல் 

வேளாண்மைத்துறை வருமானத்தை மேம்படுத்த திட்டம் அமல் 

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங்களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிகபட்ச உற்பத்திக்கான நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை மேம்படுத்த வழி செய்கிறது

இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும்.

மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல்விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி போன்றவற்றை திட்ட வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் சிறு/குறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு/குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,  தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments