காலை உணவின் முக்கியத்துவம்
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது முக்கியத்துவம் அளிக்கின்றது அவற்றிலும் காலை உணவு உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றது காலை உணவை தவிர்ப்பதன் மூலமாக ஏற்படும் விளைவுகள் காண்போம்
- ஒரு நாளைக்கு 1500 முதல் 1800 வரை கலோரிகள் நம் உடலுக்கு தேவைப்படுகிறது.
- நாம் காலையில் உண்ணும் உணவில் இருந்து தான் நமக்கு மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் கிடைக்கிறது.
- காலை உணவை தவிர்ப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- குறிப்பாக பெண்களுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி உண்டாகலாம், மற்றும் இதய நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- உணவு உண்டபின் உடனே உறங்கக்கூடாது.குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
- காலை உணவை தவிர்பது உடலுக்கும், மனதிற்கும் கேடு.வயிறு சார்ந்த பிரச்னைக்கு இதுவே முதல் புள்ளியாகும்.
- காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் வேலை செய்தால் வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்கும்; நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை ஏற்படும்.
- குழந்தைகள், மாணவர்கள் அறிவு சார்ந்த முடிவுகள் எடுக்க முடியாது.
- காலை உணவைத் தவிர்ப்பதால் சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- காலை உணவு தவிர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.