அங்கனவாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள்
இராமநாதபுரம் கீழக்கரை அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்லி விழுந்த உணவ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது.இங்கு நேற்று குழந்தைகள் அப்போது உணவில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே உணவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 9 பேரையும் வாகனத்தில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். தகவல் அறிந்து கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனி குமார், ஆகியோர் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர்..
கலெக்டர் ஆறுதல்
மேலும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கீழக்கரை நகராட்சி தலைவர் செஹனா ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, தில்லை ரகுமான், அரசு மருத்துவ உசேன் மற்றும் தி.மு.க.அயலக அணி ,போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுபாஷ், ஆகியோர் இருந்தனர்.