பரமக்குடியில் நடைபெற்ற கலை திருவிழாவில் தெருக்கூத்து, ஆதிவாசி வேடங்களில் பள்ளி மாணவர்கள் நடித்து அசத்தினர். தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் ‘கலைத் திருவிழா’ என்னும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கலையரசன், கலையரசி – பட்டம்
சமூக நாடகம், வீதி நாடகம்
மூன்று பிரிவுகளில் நடைபெறும் போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான வட்டார, வருவாய், மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிலைகளில் நடைபெறும். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தில் உள்ள 25 பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ – மாணவிகள் கலை திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

நாட்டுப்புற பாடல் வில்லுப்பாட்டு, மனிதநேய பாடல், கொன்னக்கோல், செவ்வியல் இசை, பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், கஞ்சி உள்ளிட்ட இசை கருவிகளை கொண்டு இசைத்தனர். அதேபோல் தெருக்கூத்து, சமூக நாடகம், வீதி நாடகம், தனிநபர் நடிப்பு, ஒயிலட்டம், மயிலாட்டம், ஆதிவாசிகள் உள்ளிட்டவற்றை தத்துரூபமாக நடித்து அசத்தினர். அதேபோல் பாரதியார், பாரதிதாசன்.
தெருக்கூத்து ஆதிவாசி – அழியும் கலைகள்
பிற தமிழ் கவிஞர்களின் பாடல்கள், கவிதைகளை ஒப்புவித்தல், பழங்கள் காய்கறிகளைக் கொண்டு சிற்பங்களை செய்தல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை பள்ளி மாணவர்கள் செய்தனர். அழிந்து வரும் கலைகளான தெருக்கூத்து ஆதிவாசி உள்ளிட்ட வேடங்களில் நடித்து அசத்திய பள்ளி மாணவர்களை பலரும் பாராட்டினர்.