போதைப்பொருள் ஒழிப்பு கழக துவக்கம்
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு கழக துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா வரவேற்றார். முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை வகித்தார்.
சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லா கான் முன்னிலை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் நாசர், ராமநாதபுரம் அரசு மனநல மருத்துவர் பெரியார் லெனின் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார். பேராசிரியை ஷர்மிளா பர்வீன் நன்றி கூறினார்.பேராசிரியை பாத்திமா ஏற்பாட்டை செய்திருந்தார்.