பரமக்குடி டாக்டர்.அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற துவக்க விழா
பரமக்குடி புது நகரில் உள்ள டாக்டர்.அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பள்ளியின் மேலாளர் சுதா அனைவரையும் வரவேற்று பேசினார். உதவி தலைமை ஆசிரியர் அனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்துக்களை மாணவர்களிடம் விளக்கி கூறினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி சுற்றுச்சூழல் மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பேசியதாவது, ” ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நிலத்தடி நீர் மாசுபடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாக கடமையாகும். பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகள், தெருக்களில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும்.” என பேசினார்.
மாணவ – மாணவியருக்கு போட்டிகள்
மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி, பட்டிமன்றம் மற்றும் வினா விடை ஆகிய போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். தங்கள் வீடுகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என வலியுறுத்தினர்.
சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் வாசன் சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.உதவி தலைமை ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.