இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பயன் பெறும் வகையில்
இதனால் விவசாயிகளுக்கு ஏற்றுக்கூலி, இறக்குகூலி, வண்டி வாடகை போன்ற எவ்வித கமிஷனும் இன்றி அதிக இலாபத்திற்கே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்று பயனடைந்து வருகின்றனர்.
வெளிசந்தைகளில் பருத்தி 1 கிலோ ரூ.50/-க்கு விற்கப்படும் நிலையில் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் மாலங்குடி கிராமத்தில் உள்ள மதன்ராஜா என்கிற விவசாயிடமிருந்து 401 கிலோ அளவுள்ள பருத்தி மொத்த மதிப்பு ரூ.22,857க்கு தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம் பருத்தி ரூ.57/-க்கு (கூடுதலாக 1 கிலோவிற்கு ரூ.7/-வீதம்) எவ்வித இடைத்தரகுமின்றி சரியான எடைக்கு அதிக இலாபத்திற்கு விற்று பயனடைந்துள்ளார்.
e-NAM திட்டம்
மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கே நேரடியாக கொண்டு வந்து e-NAM திட்டம் வாயிலாகவும் மற்றும் தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலமும் விவசாயிகள் அதிக இலாபம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்/மேற்பார்வையாளர்கள் மற்றும் e-NAM திட்ட சந்தை பகுப்பாய்வளார்கள்
- இராமநாதபுரம் வட்டார விவசாயிகள்-8940224560,
- பரமக்குடி வட்டார விவசாயிகள்-7305353023,
- கமுதி வட்டார விவசாயிகள்-7904020713,
- இராஜசிங்கமங்கலம் வட்டார விவசாயிகள்-9790457740,
- திருவாடானை வட்டார விவசாயிகள்-6384484997,
- முதுகுளத்தூர் வட்டார விவசாயிகள்- 6383687185
என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.