பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி ஒன்றியம், நெல்மடூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியம், நெல்மடூர் ஊராட்சியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் நெல்மடூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திமுக பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள்,நெல்மடூர் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.