Wednesday, October 4, 2023
Homeசெய்திகள்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு 

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு 2013-2014- ஆம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில்       1-ம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2023-2024- ம் நிதியாண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின் போது முதலமைச்சர், ‘மாற்றுத்திறன் மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரு மடங்காக உயர்த்தப்பட்ட உதவித்தொகை

இரு மடங்காக உயர்வு அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2 ஆயிரமாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்று இருந்த உதவித்தொகை ரூ.6ஆயிரமாகவும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் என்று இருந்ததை ரூ.8ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது

அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரம் என்று இருந்ததை ரூ.12 ஆயிரம் ஆகவும், முது கலை பட்டம் மற்றும் தொழிற் கல்வி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரமாகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

விண்ணப்ப தகுதி

இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையினை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், மேலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் மூலம் பரிசீலனை செய்யப்பட்ட பின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments