இராமநாதபுரம் மாவட்டத்தில் சுந்திர தின விழாவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், பரமக்குடி சார்-ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் கலந்துகொண்டனர்.