இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் எமனேஸ்வரத்தில் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
இராமநாதபுரம் மாவட்டம் தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து 5வயதிற்குட்பட்ட 1.13 இலட்சம் குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி ஆரோக்கியத்துடன் இருந்திட மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் என வேண்டுகோள் விடுத்தர்.இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய தடுப்பூசி முகாம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
அட்டவணை முறையை படி தடுப்பூசி
இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இத்தகைய ஊசி 12 வகையான நோய்களை தடுக்கும் சக்தி கொண்டதாகும். பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை.
ஆதனால் பல்வேறு நோய்கள் தாக்கப்படுவதை கண்டறிந்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி பாதுகாத்திடும் வகையில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகின்றது. இவ்வாண்டில் தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் 12 தேதிகளிலும், செப்டம்பர் 11 முதல் 16 தேதிகளிலும் மற்றும் அக்டோபர் 9 முதல் 14 தேதிகளிலும் நாடு முழுவதும் நடைபெறுகின்றது.
தடுப்பூசி முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் படி முறையான தவணைகளில் பெற வேண்டிய தடுப்பூசிகள் அளிக்கப்படாமல் விடுபட்டிருந்தால் கண்டறிந்து பெற வேண்டிய தடுப்பூசிகளை அளிக்கும் பணி நடைபெறுகிறது.
தவணைகளில் தடுப்பூசி போடப்படும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் உள்ளனர்.
தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி அளிக்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகள் உட்பட 823 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா , வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி , பூச்சியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர் பக்கீர் முகமது மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.