Saturday, February 24, 2024
Homeஆன்மிகம்ஆடி அமாவாசை தர்ப்பணம் பற்றிய தகவல்கள்

ஆடி அமாவாசை தர்ப்பணம் பற்றிய தகவல்கள்

  • ஆன்மீக தினங்கள் அதிக மாதங்களாக இருப்பது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிழமையுமே சிறப்பு வாய்ந்தது ஆகும்.
  • குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அன்றைய தினம் நமது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும்.

ஆடி மாதத்தில் 2 அமாவாசை:

  • நடப்பாண்டில் வரும் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறது. வழக்கமாக, இதுபோன்று ஒரு மாதத்தில் 2 அமாவாசைகள் வரும் மாதத்தை விஷ மாதம் என்றே பஞ்சாங்கத்தில் கூறுவார்கள். மேலும், ஒரு மாதத்தில் 2 பௌர்ணமிகள் வந்தால் அதை சிறப்பு மாதம் என்று அழைப்பார்கள்.
  • 2023ம் ஆண்டான நடப்பாண்டில் ஆடி மாதம் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்கும் ஆடி மாதம் வரும் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முடிகிறது. இந்த ஆடி மாதத்தில் ஆடி மாதத்தின் முதல் நாளான வரும் ஜூலை 17-ஆம் தேதியே அமாவாசை வருகிறது. அதேபோல, ஆடி இறுதியில் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் அமாவாசை வருகிறது.

எந்த அமாவாசையில் தர்ப்பணம் தருவது?

  • இந்த இரண்டு அமாவாசைகளில் 2வது வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • இதனால், வரும் ஆகஸ்ட் 16-ந் தேதி வரும் அமாவாசை தினத்திலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரைகளில், ஆற்றுப்பகுதிகளில், கோயில் குளங்களில் திதி, தர்ப்பணம் அளிப்பது சிறந்தது ஆகும்.
  • ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் அருகே உள்ள கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் மக்கள் அலைகடலென திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி அளிப்பதற்காக குவிவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • வழக்கமாக, ஒரே மாதத்தில் இதுபோன்ற 2 அமாவாசை, 2 பௌர்ணமி வரும்போது சிலர் அந்த மாதங்களில் சுபகாரியங்களை தவிர்த்துவிடுவார்கள்.
  • பொதுவாக விஷ மாதத்தில் திருமணத்தை தவிர இதர சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஆனாலும், தனிப்பட்ட ஜாதக பலன்கள், ஜோதிட பலன்கள் ஆகியவற்றை தக்க ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசித்து மேற்கொள்வது நல்லது ஆகும்.
  • இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments