- ஒவ்வொரு மலருக்கும் தனி மணம், குணம், மற்றும் சிறப்பு உண்டு. அவற்றின் தன்மையை கொண்டு ஒவ்வொரு மலர்களையும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு சூட்டலாம்.
- செவ்வரளி மலரை எந்தெந்த தெங்வங்களுக்கு சூட்டலாம் என்று பார்ப்போம்.
- செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் செவ்வரளி மலரை அணிவித்து வழிபட்டால் அனுகிரகம் பெறலாம்.
- செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளை பழம் நிவேதனம் செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடைய உறவு வலுப்படும்.
- பஞ்சமி, அஷ்டமி திதியில் வராஹி அம்மனுக்கு இம்மலரை பயன்படுத்தினால் மிக நல்ல பலன் கிடைக்கும்.
- பெருமாள், லட்சுமி, விநாயகர், சரஸ்வதி, சிவன், நந்தி இவர்களுக்கு இம்மலரை அணிவித்தல் கூடாது. உக்ரமலர் என்பதால் பார்த்து சூட்ட வேண்டும்.
- ஸ்ரீகாளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம். அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமையில் இம்மலரை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.
- ஸ்ரீதுர்கை அம்மனுக்கு புதன், வியாழன், தவிர்த்து மற்ற அனைத்து ராகுகால வேளையிலும் இம்மலரை பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை பழம் பலிகொடுத்த பின்னரே இம்மலரை பயன்படுத்த வேண்டும்.
- கனியை காலால் மிதித்து திருஷ்டி கழித்த பின்னரோ அல்லது சூலத்தில் கனி சொருகிய பின்னரோ அல்லது எலுமிச்சை கனியை அறுத்து தீபம் ஏற்றிய பின்னரோ தான் இம்மலரை அம்மனுக்கு சூட வேண்டும்.
- பரிகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மலராகும். இம்மலரை நீங்கள் எந்த தெய்வத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தாலும் காரண காரியமின்றி பயன்படுத்தக்கூடாது.
- தோஷம் கழிக்கவோ, பகை தீரவோ, திருஷ்டி கழிக்கவோ, பிரச்சனை தீரவோ இதுபோன்று ஏதாவது பரிகாரத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- செவ்வரளி செடியை வீட்டில் வளர்க்கக்கூடாது. வனத்தில் மட்டுமே இருக்க வேண்டிய செடியாகும்.
- ஒதுக்குப்புறமான இடங்களில் வளர்க்க வேண்டிய செடியாகும். இச்செடியின் காற்று அடிக்கடி நம்மேல் பட்டால் செல்வ செழிப்பை இழக்க நேரிடும்.