Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்தென்காசி கோவில் வீரபத்திரர் பற்றிய தகவல்

தென்காசி கோவில் வீரபத்திரர் பற்றிய தகவல்

  • வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் அழைக்கப்படுகிறார்.
  • வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
  • சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான்.
  • இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதிகளை அழிப்பதற்காக வீரபத்திரரை படைத்தான் என்று குறிப்பிடுவர்.
  • வீரபத்திரரை திருஞானசம் பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சூட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
  • சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவ வடிவ மாகவும் கண்டு வழிபட்டு வருகிறார்கள்.
  • வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாக கொண்டு போற்றி வழிபடுகிறார்கள்.
  • தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருவானைக்காவு என பல்வேறு இடங்களில் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
  • அவற்றில் மிகவும் கலைநயமிக்க வகையில் தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.
  • ஆனால் தென்காசி கோவிலில் மட்டும் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை. எப்போதும் நடைபெறுவது போல் பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது.
  • அனைத்து கோவில்களிலும் சப்தகன்னிகள் அருகே வீரபத்திரர் சந்நதி அமைக்கப்பட்டிருக்கும்.
  • ஆனால் இங்கு மட்டும் தூணில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments