Saturday, December 9, 2023
Homeஆன்மிகம்வெங்கடாசலபதி விரத வழிபாடு பற்றிய தகவல் 

வெங்கடாசலபதி விரத வழிபாடு பற்றிய தகவல் 

  • அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்தது.
  • ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
  • ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் விரதம் இருந்து (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
  • ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  • சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள்.
  • துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.
  • இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.
  • துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம்.
  • காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.
  • ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள்.
  • ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.
  • ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
  • தனம் – தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.
  • வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும்.
  • புண்ணிய பலன்கள் பெருகும். வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments