இராமேஸ்வரத்தில் அருள்மிகு இராமநாதசுவாமிகள் திருக்கோயில் ஆய்வு செய்து ஒருங்கினைந்த பெருந்திட்ட பணிகள் மூலம் பக்தர்களுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் தகவல்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் பக்தர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அவர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.பணிகளை மேற்கொள்ள ஆய்வு
இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்திருக்கோயிலின் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலின் மேம்பாட்டு பணிகளையும் மேலும் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் மாஸ்டர் பிளான் மூலம் அனைத்து பணிகளும் மேற்கொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியத் திருநாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயமும் ஒன்றாகும். இந்துக்களின் முக்கிய சமய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் காசி யாத்திரையானது காசியில் தொடங்கி இராமேஸ்வரத்தில் அருள்மிகு இராமநாதசுவாமியை தரிசித்த பிறகு தான் நிறைவு பெறுகிறது.
பக்தர்கள் எளிதாக நீராடி செல்லும் வகையில் சீரமைக்கபடும்
நால்வர் பெருமக்களில் திருநாவுக்கரசராலும், திருஞான சம்பந்தராலும் பாடல் பெற்ற தலமான திருக்கோயிலுக்குள் அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை மக்கள் வாழ்வில் கடமையாக கொண்டு தீர்த்தமாடி வருகின்றனர். இத்தகைய புண்ணிய தீர்த்தங்கள் தளங்களான 22 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் எளிதாக நீராடி செல்லும் வகையில் சீரமைத்து பாதுகாக்கப்படும். அதேபோல் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு விரைவாக சென்று தரிசனம் பெற்றிடும் வகையில் கூடுதல் வரிசைக்கான வழிகள் அமைக்கப்படும். அதேபோல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவு வருவதால் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதுடன் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகள் “மாஸ்டர் பிளான்” மூலம் கூடுதல் திட்ட பணிகளையும் மேற்கொள்ள ஆலோசிக்கப்படும்.
திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்க்கபடும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரைப்படி திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து இதுவரை 3600 கோடி அளவிற்கு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு வேட்டை தொடர்ந்து நடைபெறும் அதேபோல் இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் இலங்கையில் உள்ளதாக அறிய வருகிறது அங்கு தற்போது பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் நெருக்கடி நிலை முடிந்த பிறகு இலங்கைக்கு சென்று திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் குறித்து நேரடி ஆய்வு செய்யப்படும். பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மட்டுமே வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் பூஜை பொருள் மற்றும் பரிகார பொருட்கள் ஒரே விலையில் கிடைத்திட நடவடிக்கை எடுப்பதுடன் இங்கு வரும் அனைவருக்கும் பாரபட்சமின்றி சரியான விலையில் பொருள்கள் கிடைப்பது அறநிலையத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பார்கள்.
கடல்நீரில், கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
அக்னி தீர்த்தம் என்பது மிகக் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்து வருகின்றது. இதில் கழிவு நீர் கலப்பதாக தெரிவித்துள்ளார்கள். கழிவுநீர் கலக்காமல் அக்னி தீர்த்த பகுதியை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழைக் காலங்களில் அதிகளவு மழையின் போது திருக்கோயிலை சுற்றி நடைபாதைகளில் தண்ணீர் தேங்குவதாகதெரிவித்துள்ளதையொட்டி தண்ணீர் தேங்காமல் சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலை பொறுத்தளவில் பெருந்திட்ட வரைவு ஒன்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரைப்படி தயார் செய்ய உத்தரவிட்டு அதற்குண்டான பவர் பாயிண்ட் பெர்செண்டேஷன் பார்த்து அறிக்கை தயார் நிலையில் உள்ளது. விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று இந்த மாஸ்டர் பிளான் திட்டப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர். நாசர்கான் அவர்கள், திருக்கோயில் துணை ஆணையர் செ.மாரியப்பன் அவர்கள், உதவி ஆணையர் .பாஸ்கரன் அவர்கள்,உதவிசெயற்பொறியாளர்.மயில்வாகனன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்