அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், பரணி உள்ளோட்டோரின் நடிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அநீதி. கதை, பெற்றோரை இழந்த அர்ஜுன் தாஸ், சென்னையில் உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இந்த பணி அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. யாரையாவது கொலை செய்து விட வேண்டும் என்ற மனநோயில் தவிக்கும் அர்ஜுன் தாஸ், அதற்காக சிகிச்சையும் பெறுகிறார்.
இந்நிலையில், முதிர்வயது பெண்மணி ஒருவருக்கு உதவியாளராக பணி செய்யும் துஷாராவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த முதிய பெண்மணி இறந்து விடுகிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை துஷாராவை விசாரிக்கிறது. இதில் இருந்து தப்பிக்க நாயகனின் மன நோயை சாதகமாக்கி நாயகன் தான் கொலை செய்தான் என கை காட்டுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. அர்ஜுன் தாஸ் குரல் ரசிகர்களை காந்தம் போல் ஈர்க்கிறது. குரலில் இருக்கும் பேராண்மை அவரது நடிப்பிலும் மிளிர்கிறது. காளி வெங்கட் மற்றும் அவரது மகன் தொடர்பான காட்சிகள் தந்தை மகன் உறவை விவரிப்பது அழகு. ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை இயக்குநரின் கற்பனைக்கு பக்க பலமாக செயல்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் அநீதி காலத்தின் கோலம் என இத்கதை முடிகின்றது.