Thursday, March 28, 2024
Homeசெய்திகள்வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி || Innovative scam in WhatsApp payment

வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி || Innovative scam in WhatsApp payment

வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி

ஆன்லைன் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதனை வைத்து மோசடி செய்வது எப்படி? என்பதையும் மோசடியாளர்கள் கண்டுடிபிடிக்கின்றனர்.

குறிப்பாக அப்பாவி மக்களை முட்டாளாக்கும் நோக்கில் இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. அதிகரித்து வரும் யுபிஐ பேமெண்ட் சிஸ்டமே மோசடியாளர்களின் தற்போதைய குறியாக உள்ளது.

QR ஸ்கேன் மூலம் குறியீட்டை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட தொகையை செலுத்துவதை விட, WhatsApp பேமெண்ட் மூலம் பணத்தை அனுப்புவது இன்னும் சிறந்தது.

இது பரவலான மக்கள் பயன்படுத்தும் பொதுவான பேமெண்ட் சிஸ்டம் என்பதால் இதன் மூலம் மோசடியை அரங்கேற்ற மோசடியாளர்கள் தயாரக இருக்கின்றனர்.

வாட்ஸ்அப் பேமெண்ட் மூலம் ஏற்கனவே மோசடிகள் அரங்கேறி இருப்பதற்கான புகார்களும் பதிவாகியுள்ளன.

மோசடி எப்படி அரங்கேற்றுகிறார்கள் என்றால், பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களிடம் வாடிக்கையாளர்கள்போல் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.

வாங்க விரும்புவதாக கூறும் பொருட்களின் விவரங்களை சேகரித்துக் கொள்ளும் அவர்கள், பணத்தை செலுத்த தயாராக இருப்பதாக கூறி உங்களுடன் QR குறியீட்டை பகிர்ந்து கொள்வார்கள். அதனை உங்களின் கூகுள் பே மற்றும் யுபிஐ ஐடி மூலம் ஸ்கேன் செய்ய கூறுவார்கள்.

அவ்வாறு செய்யும்போது, வழக்கத்துக்கு மாறாக சில அடிப்படை தகவல்களையும் அதில் பதிவிடச் சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போது, அவர்கள் கேட்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

யார் ஒருவருக்கு பணம் அனுப்பும்போது அல்லது பெறும்போது ஒருமுறைக்கு இருமுறை தகவல்களை சரிபார்த்த பின்னர்பணத்தை அனுப்புங்கள். பணத்தை பெறுகிறீர்கள் என்றால், வழக்கமான நடைமுறைக்கு மாறாக கூடுதல் தகவல்களை பதிவிடக்கோரி வற்புறுத்தினால் அதனை செய்ய மறுத்துவிடுங்கள்.

கனிவாக பேசி உங்களை மயக்கி, இந்த மோசடியை அரங்கேற்றுவார்கள்.

ஏமாந்து இருந்தீர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் காலியாகிவிடும்.

 

இதையும் படியுங்கள் || தங்க குதிரையில் வந்து வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments