தமிழ்நாடு முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விஷ்ணு சந்திரன், தலைமையில் ஏற்பாடு.
முக்கிய உறுப்பினர்கள் பார்வையிட்டனர்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 17.08.2023 மற்றும் 18.08.2023 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்கள்.17.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெறும் பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து 18.08.2023 அன்று மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீனவர்களை சந்திக்க உள்ளார்கள்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.