ராமநாதபுரத்தில் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு துறையின் மூலம் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் ஜானி டாம் வர்கீஸ், தலைமையேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கு கொண்டார்.
ஆண்டுதோறும் நடைபெற்ற பேரணி
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினமாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பது குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த பேரணி நடைபெறுகின்றன.
இப்பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வண்ணம் விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று நிறைவாக வள்ளல் பாரி நகராட்சி மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. தொடர்ந்து வள்ளல் பாரி நகராட்சிமேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பதன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருகினைந்து விழிப்புணர்வு பேரணி
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பாரி, மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, சமூக நலத்துறை அலுவலர் தமயந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மீனாட்சி சுந்தரேஸ்வரி , சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.