தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி கழகம்”விராசத் திட்டம்” அறிமுகம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையினர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த கைவினை கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் துவங்கும் வகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதி கழகம் (NMDFC) “விராசத் திட்டம்” (VIRASAT) அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கைவினைஞர்கள் உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திட ஏதுவாக கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
மேற்படி விராசத் கடன் திட்டம் 1-ன் கீழ் பயன்பெறுவதற்கு:
- விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயிருப்பின் ரூ.98,000/-ம்,
- நகர்ப்புறமாயிருப்பின் ரூ.1,20,000/-ம் இருத்தல் வேண்டும். கடன்தொகை ரூ.10.00 இலட்சம் வரை வழங்கப்படும்.
- ஆண் கலைஞர்களுக்கு 5 சதவீதம், பெண் கலைஞர்களுக்கு 4 சதவீதம் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.
- திரும்ப செலுத்த வேண்டிய காலம் அதிகபட்சம் 5 ஆண்டுகள்.
மேற்படி விராசத் கடன் திட்டம் 1-ன் கீழ்:
- பயன்பெறுவதற்கு திட்டம் 1-ன் கீழ் பயன்பெறாத விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- வரை (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) இருத்தல் வேண்டும்.
- கடன்தொகை ரூ.10.00 இலட்சம் வரை வழங்கப்படும். ஆண் கலைஞர்களுக்கு 6 சதவீதம், பெண் கலைஞர்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.
- திரும்ப செலுத்த வேண்டிய காலம் அதிகபட்சம் 5 ஆண்டுகள்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, நகல், மற்றும் கடன் பெறும் தொழில், குறித்த திட்ட அறிக்கையுடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் .என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.