மும்பை: மும்பை பங்குச் சந்தையின் துணை நிறுவனமான ஏசியா இண்டெக்ஸ், ‘சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30’ என்ற புதிய குறியீட்டை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறாத ‘பிஎஸ்இ 100’ குறியீட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் செயல்திறனை புதிய குறியீடு கண்காணிக்கும். நிதிச் சேவைகள், நுகர்வோர், மின்சாரம், பொருட்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் அவற்றின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இடம்பெறும்.