இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்து பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் கட்டடங்கள் மற்றும் போதியளவு மருத்துவர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தகவல்
மருத்துவமனையை ஆய்வு செய்தார்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில்,தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் இராமேஸ்வரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் போன்றவற்றை பார்வையிட்டர்.
வளர்ந்து வரும் மக்கள் தொகை
இராமேஸ்வரம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் நாள்தோறும் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனையில் போதிய சிகிச்சை வழங்குவதற்கு ஏதுவாககூடுதல் மருத்துவ அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகளுக்கான கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டடம் மற்றும் போதியளவு மருத்துவர்கள் நியமிக்கவும், மேலும் இந்த வளாகத்தில் பயன்பாடு அற்று பழுதடைந்த நிலையில் நிலுவையில் உள்ள கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் இக்குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் மருத்துவர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கிட அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது உடன் இருந்தவர்கள்
இந்த அய்வின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன் மற்றும் சிந்தனை செல்வன் சிவக்குமார் , தளபதி , நாகை மாலி , பரந்தாமன் , பூமிநாதன் , ஜவாஹிருல்லா முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் மாண்புமிகு அன்பழகன் இராமேஸ்வரம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.