ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பொதுக்குழுவின் தலைவர் திருகுசெல்வபெருந்துகை அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலையர் ஜானி டாம் வர்கீஸ், அணிகள், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மாரிமுத்து , பொது கணக்குக்குழு செய்யாளர் சீனிவாசன், முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு பணிகள்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் உரிய நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. ஜனநாயக அடிப்படையிலான நிர்வாகத்தை உறுதி செய்வதில் சட்டப்பேரவை சிறப்பான அமைப்பாசு உள்ளது. தொடர்ந்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் விதமாக செயப்பட்டு வருகிறது. பொதுக் கணக்குழு நடமாடும் சட்டன்ற பேரவையை போன்றது. அரசின் வெளிப்படை தன்மையை உறுதி செய்கிறது. சிறப்பான நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் பொருட்டு, இக்குழு அடிப்படையாகவும் திகழ்கிறது.
நாட்டில் பொருளாதாரத்தையும், அரசின் நிதிநிலைவையும் பாதுகாப்பதற்கொவும், குறிப்பாக ஓவ்வெரு துறைக்கும் அரசால் ஒதுக்கப்படும் நிதியினை முறையாக செலவிடுவது மற்றும் செலவிளங்கள் தொடர்பாக தணிக்கைத் துறையில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்தும், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அரசின் நலத்திட்டங்களின் குறித்த செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு, அதனடிப்படையில் அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்து, பணியை மேற்கொள்வது இக்குழுவின் பணியாகும்.
நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை அரசாங்கங்கள்:
உறுதி செய்யும் வேளையில், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் நோக்கங்கள் பொருத்தமானதாக அமைய வேண்டும். செலவினங்கள் கவனமாக கையாண்டால் தான், குறுகிய கால மற்றும் நீண்டகாய வளர்ச்சியின் நோக்கங்கள் சம கயாத்தைப் பெறும். எனவே, சமூக-பொருளாதார நோக்கங்களுக்காக நாட்டின் வளங்கள் திறப்பட பயன்படுத்தப்படுகிறதா என்பதை பொதுகளாக்குக்குழு ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைத்துத்துறை அலுவலர்கள், தங்களது துறைக்கான செலவினங்கள், இருப்புகள் மற்றும் திட்ட செயல்பாடுகள் ஆகியன தொடர்பாக அளிக்கப்படும் விபரங்கள் பாரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, அரசிற்கு இக்குழுவின் வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் சுற்றியுள்ள பகுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
இராமேஸ்வரம் வட்டம், தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பசும் பகுதியினை பார்வையிட்டு அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மண்டபம் பகுதியில் மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயனிபாட்டிற்காக ரூ.2000.00 இலட்சம் மதிப்பீட்டில் மீள் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்கும் கட்டி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அழகன்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அலையாத்தி காடுகள் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை பார்வையிட்டதுடன் பொதுமக்கள் தங்களின் பொருளாதாரத்திற்காக இது போன்ற பயளிகள் அந்தந்த ஊராட்சியில் வழங்கப்படுகிறது. அதனை பயன் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் சக்கரக்கோட்டை பகுதியில் சிட்கோ அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு தொழில் முனைவோருக்கு தேவையான இடங்களை வழங்குவதுடன் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை மேற்கொள்ள வோண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார்.
ஊக்கத் தொகை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மாற்றுத்திறனானி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் கணவனளால் கைவிடப்பட்டவர்கள் உதவித் தொகை என 24 பயனாளிகளுக்கு ரூ.2,88,000 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணத் தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407/- பதிப்பீட்டிலாா இலவச தையல் இயந்திரங்களையும், பாலட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ-33,000/- மதிப்பீட்டிலான இளவச தையல் இயந்திரங்களையும் என மெத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினர் பொதுக் களாக்குக்குழுவின் தலைவர் செல்வபெருத்தகை வழங்கினார்.
முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கனோசன் . கூடுதல் ஆட்சியர் (வார்ச்சி) பிரவீன குமார்,உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகாள் ஐக்தீஷ் கதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி , சார்பு செயலாளர் பாலசீனிவாசள் மற்றும் அரசு அலுவர்கள் உட்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.