இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி.ஆர். தர்மர் பரமக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:
நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேசினேன். அப்போது நாட்டில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கிராமங்களை தத்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட நிதியின் விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கிராமங்களின் விபரங்கள் அந்த திட்டம் செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஆகியவை குறித்த கேள்விகளுக்கு மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா பதில் அளித்து கூறுகையில், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பால் பதப்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான திட்டம் பால் கூட்டுறவு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு பால் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தேசிய கால்நடை மிஷின், கால்நடை வளர்ப்பு, உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கால்நடைகள் உடல் நலம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டம், கால்நடை கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
நிதி விபரங்கள்,
பின்பு ஸ்மார்ட் சிட்டி மிசோனின் முக்கிய அம்சங்கள், அந்த திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விபரங்கள், தமிழகத்தில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டு விவரம், தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ கௌசல் கிஷோர் கூறுகையில், 100 ஸ்மார்ட் நகரங்களுக்கு ஒரு நகரத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ.100 கோடி பொருந்தக்கூடிய அடிப்படையில் சமமான நிதியை மாநில அரசு, மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கும். ஸ்மார்ட் நகரங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
அதன் மூலம் உள் கட்டமைப்பை வழங்குவதற்கும், குடிமக்களுக்கு சீரான வாழ்க்கை தரத்தை வழங்குவதற்கும், ஸ்மார்ட் மூலம் சுத்தமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை வழங்குவதற்கும் திட்டம் ஆகும். சிறிய பகுதிகளை பார்த்து மற்ற நகரங்களுக்கு இது கலங்கரை விளக்கத்தை உருவாக்கும். 7978 திட்டங்கள் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதில் 5909 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் செயல் பட வேண்டும்
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர் ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. என பதிலளித்தார். மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு முறையாக செயல்படுத்தினாலே நன்றாக இருக்கும். தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு கூறினார்.