Friday, April 12, 2024
Homeஆன்மிகம்கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

கைகளில் கயிறு கட்டுவதால் இத்தனை நன்மையா?

  • கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு காப்பு கயிறு கட்டுகிறார்கள்.
  • மஞ்சள், சிவப்பு நிற மந்திரிக்கப்பட்ட கயிறுகள் நம்மை தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு கலசமாக செயல்படுகிறது.
  • பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் காப்பு கயிறு அணியலாம்.
  • பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்றவை மந்திரங்களின் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை.
  • காப்பு கயிறும் மந்திரத்தை ஈர்க்கும். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.
  • காசி கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன் போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் அணிவதும் ஒரு வகையில் காப்பதே.
  • ஆண்கள் வலது கைகளிலும்,பெண்கள் இடது கைகளிலும் காப்பு கயிறைக் கட்டி கொள்ள வேண்டும்.
  • மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டுவதாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது.
  • எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
  • சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  • கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம்.
  • கருப்பு நிறக்கயிறை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.
  • ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments