Home Movie Makers சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் புதிய திரைப்படம் சைரன்.
பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்குறார்கள். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.