Saturday, February 24, 2024
Homeசினிமாஆந்திர முதல்வராக தெலுங்கு படத்தில் நடிக்கும் ஜீவா 

ஆந்திர முதல்வராக தெலுங்கு படத்தில் நடிக்கும் ஜீவா 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி ‘யாத்ரா’ என்ற படம் தெலுங்கில் உருவானது. மஹி வி ராகவ் இயக்கிய படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது, மேலும் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து இதன் அடுத்த பாகம் ‘யாத்ரா 2’ என்ற பெயரில் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இதையும் இயக்குகிறார். இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதன் போட்டோஷூட் சமீபத்தில் நடந்தது. நடிகர் ஜீவா, ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் அப்படியே இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments