இளையான்குடியில் உள்ள கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக துணைத்தலைவர் லியாக்கத்தலி தலைமை தாங்கினார். செயலாளர் முகமது இப்ராம்பா ஜனனி, முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாசர், மாவட்ட பிரதிநிதி ஜெய்யது கான், முன்னாள் இளையான்குடி பேரூராட்சி தலைவி செய்யது கமீஹா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளுக்கு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர். தலைமை ஆசிரியர் பிச்சை முகமது நன்றி கூறினார்.