கமுதி வட்ட கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கமுதி வட்டத்தில் காலியாக உள்ள 7 வருவாய்க் கிரா மங்களுக்கான கிராம உதவியா ளர் காலிப் பணியிடங்களுக்கு தகு தியுள்ள நபர்கள் நவ.7ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பாபிதா தெரிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் காடமங்கலம், நகரத் தார்குறிச்சி, கே.வேப்பங்குளம், கோவிலாங்குளம், பொந்தம்புளி, தவசிக்குறிச்சி, பெருநாழி ஆகிய 7 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் வரும் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.எழுத்துதேர்வு மற்றும் வாசிப்புத் தேர்வு நவ.30 ஆம் தேதியும், நேர்முகத் தேர்வு டிச.15, 16 தேதிகளிலும் நடைபெறும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், கல்விச் சான்று, இருப்பிட ஆதாரம், ஆதார் அட்டை நகல், வாகன ஓட்டுநர் உரிமம் நகல், வகுப்புச் சான்றிதழ் நகல் முன்னுரிமைச் சான்று நகல், மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் அவர் தெரிவித்துள்ளார்.