தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 4-வது இடம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் தேசிய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் ஆண்டு தோறும் உலக பல்கலைக்கழகங்களின் அளவில் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தர வரிசைப் பட்டியலுக்காக அந்த நிறுவனத்திடம் கடந்த மார்ச்சில் 104 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்கள் தங்களது தரவுகளைச் சமர்ப்பித்தன.
இந்நிலையில் நேற்று அந்நிறு வனம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் 1,799 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றன.
இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 401-500-வது பிரிவில் இடம் பெற்றுள்ளது.மேலும் தேசிய அளவில் 4வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று உள்ளது
இந்தத் தரவரிசைப் பட்டியலுக்காக டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் கற்பித்தல், ஆராய்ச்சி,அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் ஆகிய நான்கு பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தி உள்ளது.
இதுதவிர, 121 மில்லியனுக்கும் அதிகமான வெளியீடுகளில் ஆராய்ச்சி 15.5 மில்லியனுக்கும் அதிகமான மேற்கோள்களைப் பகுப்பாய்வு செய்துள்ளது. உலகளவில் 40 ஆயிரம் அறிஞர்களின் கருத்துகளையும் மதிப்பை சரியான தரவுகளைச் சேகரித்து சமர்ப்பித்த அழகப்பா பல்கலைக் கழக தரவரிசைப் பிரிவு இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினரையும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் க.ரவி பாராட்டினர்