பரமக்குடி நகராட்சி தலைவரானார் கருணாநிதி.
பெயர்: எஸ்.கருணாநிதி.
பிறந்த தேதி: 14/03/1974
வயது : 48.
படிப்பு : தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் DECE படித்துள்ளார்.
தொழில்: முழு நேர அரசியல்வாதி.
குடும்பம்:
மனைவி சுதாராணி, (23வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் – 2006).
மகன் : மனோரஞ்சன்.
அரசியல் அனுபவம்:
1996 முதல் 2006 வரை உள்ள காலகட்டத்தில் 23வது வார்டு வட்ட பிரதிநிதியாகவும், பரமக்குடி நகர் இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். அந்த காலகட்டத்தில் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சிறைவாசமும் சென்று வந்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பிரிக்கப்படாத பரமக்குடி நகர செயலாளராக இருந்து வந்தார். பின்னர் நகர செயலாளர் பதவி இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இரண்டு முறை கவுன்சிலர்
கடந்த 2001, 2011 காலகட்டத்தில் கவுன்சிலராக வெற்றி பெற்றார். அப்போது 2011ஆம் ஆண்டு தி.மு.க சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தி.மு.க கூட்டணி வெற்றி – 21.
தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தி.மு.க கூட்டணி சார்பில் திமுக : 19, அதிமுக : 10, பி.ஜே.பி : 2, சுயேட்சை – 3, ம.தி.மு.க – 2. வெற்றி பெற்றனர்.
போட்டி இல்லை
இந்நிலையில் தி.மு.க சார்பில் வேட்பாளராக கருணாநிதி அறிவிக்கப்பட்டார். அதேபோல அ.தி.மு.க சார்பில் நகர் மன்ற தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்று நடந்து முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில் போட்டியின்றி கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் || ராமநாதபுரம் மாவட்ட யூனியன் டிரைவர்கள் பணியிட மாறுதல் செய்ய வேண்டும்