இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமக்குடியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் முன்பு, அவரது திருவுருவப்படத்திற்கு பரமக்குடியில் எம்எல்ஏ முருகேசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகர் கருணாநிதி நகர் வடக்கு செயலாளர் ஜீவரத்தினம்.
மாவட்ட சிறுபான்மையர் பிரிவு துணை அமைப்பாளர் மாலிக், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி., அருளானந்து, நகர் துணைச் செயலாளர் பாண்டியன், சமூக வலைதள தொகுதி பொறுப்பாளர் ஜோசப் குழந்தை ராஜா,நகர் மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராதா பூசத்துரை,எஸ் ஆர் சதீஷ்குமார், ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் அமைப்பாளர் துரைமுருகன், நகர் பொறுப்பு குழு உறுப்பினர் கலீல் ரகுமான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்
33வது வார்டு சந்தைக் கடைத்தெருவில் வார்டு செயலாளர் வீரபாண்டியன் நகர் இளைஞர் அணி தர்மராஜா ஆகியோரது ஏற்பாட்டில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
ம.தி.மு.க. சார்பில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் குணா ஏற்பாட்டில், பொதுக்குழு உறுப்பினர்கள் பழ சரவணன், பிச்சைமணி, அவைத்தலைவர் நயினா முகமது, நகர் பொருளாளர் அண்ணாதுரை, மற்றும் முனீஸ்வரன், கஜேந்திரன், சரவணன், முருகானந்தம், பாண்டியன் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஊராட்சிக்கு ஒன்றிய குழு தலைவர்கள் பங்கேற்பு
போகலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் கதிரவன் தலைமையில் சத்துர குடி பேருந்து நிலையம் அருகே கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில்,போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில்,ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது பரமக்குடி மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பார்த்திபனூரில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நயினார் கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, தலைமையில் கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலருவே அஞ்சலி செலுத்தினர். நயினார் கோவிலில் கிளைக் கழகம் சார்பாக கிளை செயலாளர் அரசு மணி தலைமையில் நயினார் கோவில் நிர்வாகிகள் போஸ்,ரெங்கன்,முகேஷ், நாகராசன், போஸ், கலந்து கொண்டார்கள் மற்றும் இசை வேளாளர் சங்கத்தின் சார்பில் மலர் செலுத்தப்பட்டது.