கீழப்பெருங்கரை ராஜராஜேஸ்வரி கோயில் நவராத்திரி சூரசம்ஹார விழா.
பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தில் இராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி உற்சவ சூரசம்ஹார விழா நடைபெற்றது.
பரமக்குடி அருகே உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடத்தின் சார்பில் 13ம் ஆண்டு நவராத்திரி உற்சவ சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள் சப்த கன்னிகளுடன் வைகை ஆற்றில் எழுந்தருளி மஹிஷாஸ்வர வதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வைகையாற்றில் கரைத்தனர்.
கார்த்திக் சுவாமிகள் வேத பாராயணத்துடன் சக்தி பீடத்தின் நிறுவனர் தீட்சிதர் விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் நடைபெற்து. இத்தத நிகழ்ச்சியில் சக்தி பீடம் டிரஸ்டிகள், நிர்வாகிகள் மற்றும் பக்தகோடிகள் கலந்துகொண்டு அம்பாள் அருள் பெற்றறனர். பின்னர் சிறப்பாக அன்னதானம் நடைபெற்றது.