இலவச சட்ட உதவி மையம் பற்றி அறிவோம்
வழக்கை நடத்த முடியாத ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது. அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும்.
பண வசதி
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும். பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
சட்ட உதவிகள்
வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் வறுமையில், தனிக்காவலில் இருக்கும் நிலையில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை அரசு அவருக்கு வழங்க வேண்டும். இலவச சட்ட உதவி ஒருவருக்கு மறுக்கப்படுவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 க்கு எதிரானது.
சட்டத்தின் ஆட்சி
சட்டத்தின் ஆட்சி என்பது தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பு. ஒருவருக்கு சட்ட உதவி வழங்கப்படவில்லை என்றால், ஒரு வழக்கின் விசாரணையே சீர்குலைக்கப்படுகின்றது என்று கூறியது.
மேல்முறையீடு
சட்ட உதவி வேண்டி தரப்படும் மனு, மனு தந்த நபருக்கு போதிய பண வசதி இருக்கின்றது என்று தெரியவரும் பட்சத்தில் நிராகரிக்கப்படலாம். அப்படி நிராகரிக்கப்பட்ட மனுவின் மீது மனுதாரர் மேல்முறையீடும் செய்யலாம்.
வழக்குகள்
- அவதூறு வழக்கு.
- பழிவாங்கும் வழக்கு
- நீதிமன்ற அவமதிப்பு.
- உறுதி மொழியில் பொய் கூறுதல்.
- தேர்தல் தொடர்பான வழக்குகள்.
- அபராதம் 50 ரூபாய் மேல் இல்லாத வழக்கு.
சட்ட உதவி என்பது பிச்சை
பொருளியல் சார்ந்த குற்றங்கள் போன்ற குற்றங்களுக்கு இலவச சட்ட உதவி பொருந்தாது. சட்ட உதவி என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.