- காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாக கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.
- சாப்பிடும் போது பேசவோ, இடது கையை தரையில் வைத்தோ, காலணி அணிந்தோ, சூரியன் உதிக்கும் பொழுதோ, மறையும் பொழுதோ, வாசலுக்கு எதிரே அமர்ந்தோ சாப்பிடக்கூடாது.
- இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ, நிலவின் ஒளியிலோ, அதேபோல் பவுர்ணமியில் தனியாக நிலாச் சோறு சாப்பிட கூடாது.
- சேர்ந்து கொண்டு சாப்பிடலாம்.தட்டை மடியில் வைத்தோ, கையில் ஏந்தியவாரோ, அதிக கோபம் கொண்டோ, அதேபோல் சாப்பிடும் போது இடையில் எழுந்து சென்ற எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடக்கூடாது.
- சாப்பிட்டு முடித்த பின்பு தட்டை வலித்தோ, விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிட்டால் தரித்திரம்.
- செம்பு, அலுமினியம், வெண்கலப் பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
- வாழையிலை, வெள்ளி தட்டில் சாப்பிட்டால் குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்கும்.
- சமைத்த பொருட்களை நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து மூடக்கூடாது.
- இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, பாகற்காய், தயிர், கீரை, கஞ்சி ஆகியவற்றை சாப்பிட கூடாது.
சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்.
RELATED ARTICLES