கொரிய பெண் யூடியூபரின் மோசமான மும்பை அனுபவம்
கடந்த வாரம் மும்பையின் கர் பகுதியில் தென் கொரிய யூடியூபரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு மும்பை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
கொரிய பெண் யூடியூபர் ஒருவரை மும்பையின் கர் பகுதியில் இரண்டு ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.
மும்பையை சேர்ந்த இளைஞர் கொரிய பெண் யூடியூபரின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து தன் வாகனத்தில் வரும்படி கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் இல்லை இல்லை என்று மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு, அந்த பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டு முத்தம் கொடுக்க முயற்சிக்கிறார். அதன்பின் அந்த பெண் அந்த இடத்தை விட்டு பதற்றத்துடன் நகர்ந்துவிடுகிறார். இவை அனைத்தும் அந்தப் பெண்ணின் கேமராவில் லைவாக பதிவாகியுள்ளது.
இருவருக்கும் மும்பை நீதிமன்றம் ஜாமின்
இச்சம்பவம் குறித்து, இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ன் கீழ் வழக்குப் பதிவு செய்தள்ளது.
பாந்த்ரா பெருநகர நீதிமன்றம் இருவருக்கும் தலா ரூ.15,000 ரொக்கப் பத்திரத்தில் ஜாமீன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் கார் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.