பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் அக்டோபர் 28இல் கும்பாபிஷேகம்
கமுதி பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 28-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளதாக நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம்தோறும் பௌர்ணமி பூஜை, திருவிளக்கு பூஜை, அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலயவளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் கோயில்கள் கட்டி, சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தேவர் நினைவாலயத்தில் கடந்த 2000 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் தேவர் குருபூஜையுடன், மகாகும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.வருகிற 30-ஆம் தேதி தேவரின் 115 –ஆவது ஜெயந்தி விழா, 60-ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அக். 28-ஆம் தேதி ஆன்மிக விழா, அக். 29-இல் அரசியல்விழா, அக். 30 -இல் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேம் நிகழாண்டில் வருகிற 28 -ஆம் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில், முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதை முன்னிட்டு, வருகிற 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு முதலாம் கால யாகபூஜைகளும்,28-ஆம் தேதிகாலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜைகளும், காலை 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனைகளும் நடைபெற உள்ளன.இதுகுறித்து, தேவர் நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் கூறினார்
தேவர் நினைவாலயத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாகசாலை பூஜைகளும், கும்பாபிஷேகமும் நடத்தி வைக்கப்பட உள்ளது