Sunday, November 3, 2024
Homeசெய்திகள்ஷங்கர் மீது மீண்டும் குண்டாஸ்: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கார்த்தி சிதம்பரம்

ஷங்கர் மீது மீண்டும் குண்டாஸ்: ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கார்த்தி சிதம்பரம்

சென்னை: ‘சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண் போலீஸ் அதிகாரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது.

மீண்டும் குண்டாஸ் ரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, சவுக்கு சங்கர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட எஸ்பியின் பரிந்துரையின்படி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளார். புழலில் இருந்து, சவுக்கு சங்கர், மதுரை சிறைக்கு மாற்றப்பட்டு, கலெக்டரின் உத்தரவு, சிறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டத்தின் அப்பட்டமான மீறல் இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: சவுக்கு சங்கரின் பேச்சு அநாகரீகமானது. மிகைப்படுத்தியும் பரபரப்பாகவும் பேசுகிறார். ஆனால், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான மீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்வது மீண்டும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிருப்தி

அவரது இந்த கருத்து, கூட்டணி கட்சியான ஆளும் தி.மு.க.,வினர் மத்தியிலும், ஆளுங்கட்சியை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments