Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இ-சேவை தளம் சேவை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இ-சேவை தளம் சேவை தொடக்கம்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இ-சேவை தளம் வழியாக

  1. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்,
  2. உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம்,
  3. வங்கிக்கடன் மானியம் விண்ணப்பம்,
  4. திருமண உதவித்தொகை விண்ணப்பம்,
  5. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் ஆகிய ஐந்து திட்டங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் வகையில் தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இச்சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 2023 முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்பதனால் மாற்றுத்திறனாளிகள் இவ்விணையதளத்தினைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம் (தொலைபேசி எண்: 04567-231410) என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments