Tuesday, March 28, 2023
Homeராமநாதபுரம்இரண்டு நாளாக நீதிமன்றப் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்ட...

இரண்டு நாளாக நீதிமன்றப் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

இரண்டு நாளாக நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, கமுதியில் இரண்டு நாளாக நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்

தகாத வார்த்தைகளால் பேசிய காவல்துறையினர்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்  அழகுமுத்து மாரியப்பன்  இவர், ஒருவழக்கு  தொடர்பாக முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், அது தொடர்பாக கடந்த செவ்வாய்க் கிழமை காவல் உதவி ஆய்வாளர் செல்வத்திடம் கேட்டார்.

அப்போது, வழக்கறிஞர் அழகுமுத்து மாரியப்பன் , உதவி ஆய்வாளர் செல்வம் தகாத வார்த்தைகளால்  பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் அழகுமுத்து மாரியப்பன், ராமநாதபுரம் மாவட்ட  வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள்  சங்கம் சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் இரண்டு நாளாக நடைபெறுகின்றது.

மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

கமுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு,  வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் நேதாஜி சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எல்லா வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதா மக்களின் இயல்பு நிலையானது பாதிப்புக்கு உள்ளானது இதனால், வழக்குகள் தொடர்பாக கமுதி நீதிமன்றத்துக்கு வந்த பெரும்பாலான பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments