ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய Citizen Login -யை முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய்த்துறை சான்றுகள், 6 வகையான முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்கிறார்கள்.
எழுத்துப் பிழை, தவறான ஆதாரங்கள்
அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுகிறது என புகார்கள் வருகிறது. பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.
அபராதம், சட்ட நடவடிக்கை
எனவே, தனியார் கணினி மையங்களில் Citizen Login -ல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்மந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிக கட்டண புகார்
மேலும், பொதுமக்கள் இடைதரகர்களை தவிர்த்து, அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும்.
புகார்
சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு[email protected] என்ற மின்னஞ்சல் மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின் மாவட்ட மேலாளரிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.