- மூளை – கோளாறு
எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் பார்கின்சன் நோய் போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- விழித்திரை – நோய்
எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின், நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை குணபடுத்தும்.
- குடல் – சுத்தம்
எலுமிச்சை குடல் தசையின் இயக்க திறனை அதிகரித்து குடலை சுத்தமாக வைக்க செய்கிறது. குடலில் உள்ள கெட்ட கழிவுகளை அகற்ற எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.
- கல்லீரல் – நச்சுதன்மை
ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீக்கும்.
- பித்தப்பை, சிறுநீரக – கற்கள்
எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
- நீரிழிவு – சர்க்கரை அளவு
நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.
- முதுமை – அணுக்கள்
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்.
- புற்றுநோய் – அணுக்கள்
இயற்கையாகவே எலுமிச்சையில் இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.
- உடல் – அலர்ஜி
எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.