Thursday, April 18, 2024
Homeசட்டம்மஞ்சள் நோட்டீஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

மஞ்சள் நோட்டீஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

மஞ்சள் நோட்டீஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

  • கடன் வாங்கியவர் கடனை திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில் கடன் கொடுத்தவர்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பினால் கடன் வாங்கியவர் திவால் ஆகிவிட்டார் என்று அர்த்தம்.
  • திவால் பார்ட்டி     

பிரிட்டிஷ் ஆட்சியில் தான் வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் ‘ நான் திவால் பார்ட்டி’ என்று நோட்டீஸ் மூலம் அறிவிக்கும் முறை அமலுக்கு வந்தது. நான் திவால் பார்ட்டி என்று அறிவித்து விட்டவர்களை நீதிமன்றம் இறந்து விட்டதாகவே கருதும்.

  • மஞ்சள் நோட்டீஸ்     

நான் திவால் பார்ட்டி என்று நோட்டீஸ் கொடுத்தவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் மஞ்சள் கலரில் நோட்டீஸ் அடிக்கப்பட்டது. அது காலப்போக்கில் வெள்ளை கலராக மாறிவிட்டது.

  • கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம் 1929 

ஒருவர் தொழிலுக்காக நிறைய நபர்களிடம் கடனை பெற்றுவிட்டு திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுப்பர். அந்த சமயத்தில் கடனாளி நீதிமன்றத்தில் நான் வாங்கிய கடன் அதிகமாக உள்ளது.

  • வறியவர்

அதனால் என்னை வறியவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்பதை நிறுத்த வேண்டும் என்றும் சட்ட பூர்வமாக, ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மனுச் தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டால் அவர் திவால் ஆனவர்(வறியவர்) (insolvent) என்று அறிவிக்கப்படுவார்.

  • வழக்கு தாக்கல்     

கடனாளி மாகாண நொடிந்து போதல் சட்டம் 1929 பிரிவு 10 மற்றும் பிரிவு 13 கீழ் மனு தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் கடன் கொடுத்தவர்களின் முழு முகவரியுடன் அனைவரையும் சேர்க்க வேண்டும்.                                யார் மனு தாக்கல் செய்ய நினைக்கிறாரோ அவருடைய எல்லைக்குட்பட்ட சார்பு நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

  • ஆவணங்கள்

1. வழக்கு தாக்கல் செய்யும் நபரின் பெயரில் அசையா மற்றும் அசையும் சொத்தும் இல்லை என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்க வேண்டும்.

2.ஆதார் கார்டு.

3.ரேசன் கார்டு.

  • வழக்கில் வெற்றி

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து திறமையாக வாதாடி நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை “வறியவர் ” என்று அறிவித்து விடுவார்கள். அதன் பின்னர் கடனை கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்க தேவையில்லை.கடனை கொடுத்தவர்கள் கடனாளியிடம் கடனை கேட்க கூடாது என்று தீர்ப்பு வழங்குவார்கள். பெரும்பாலும் வறியவர் கோரிக்கைகளை நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள். ஏனெனில் வறியவர் என்பது கேவலம் என்று விதி விலக்கின்றி எல்லா நீதியரசர்களும் கருதுவார்கள். மேலும் வறியவர் என நீதிமன்றம் கூறிவிட்டால் வறியவர் ஆனவர் தேர்தலில் நிற்க முடியாது.

  • வழக்கு தோல்வி 

ஒருவேலை நீதியரசர்கள் கடனை செலுத்த கடனாளிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தகுந்த ஆதரங்கள் மற்றும் சாட்சியங்களின் மூலம் கருதினால் 4 ல் 1 பகுதியை அல்லது முழுமையாக கடனை திரும்ப செலுத்த தீர்ப்பு வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments