- அமாவாசையின் அதிதேவதை சிவபெருமான். அன்று அவரை வணங்கினால் எல்லா நன்மையும் உண்டாகும்.
- பவுர்ணமி தோறும் சிவபெருமானை வணங்கினால் மனஅமைதி கிடைக்கும்.
- கற்பூர ஆரத்தியை வணங்கும்போது மூக்கு கண்ணாடியை கழற்றி விட வேண்டும்.
- தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும்.
- தேய்பிறை செவ்வாய் கிழமையோடு சதுர்த்தசி திதி இணையும்நாளில் கடலில் நீராடுவது சிறப்பானது. பெரியோர்கள் புகழும் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.
- கோயில் பிரசாதங்களை நின்று கொண்டு சாப்பிடவோ, குறை கூறவோ கூடாது.
- எந்த வீடு நன்றாக மெழுகி கோலம் போட்டு பிரகாசிக்கிறதோ, அங்கு மகாலட்சுமி வாசம் செய்வாள்.
- பிறரை உதவி செய்யும்படி வேண்டுவதும் புண்ணியமாகும்.
- திருமணமாகாதவர்கள் ஒருநாளும் மரக்குச்சியினால் பல் துலக்கக்கூடாது.
- ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத் திருமணமான இரண்டு மாதத்திற்கு பின்னரே, மற்றொருவருக்கு திருமணம் செய்வது நல்லது.
- கண் குறைபாடு உள்ளவர்கள் காலை 7:30 மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்தால் அந்த பிரச்னை தீரும்.