Friday, March 29, 2024
Homeதொழில்புதிதாக போஸ்ட் ஆபீஸ் தொடங்கலாம் வாங்க

புதிதாக போஸ்ட் ஆபீஸ் தொடங்கலாம் வாங்க

புதிதாக போஸ்ட் ஆபீஸ் தொடங்கலாம் வாங்க

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன. இதில், 89 சதவீத அஞ்சலகங்கள் கிராம புறங்களில் உள்ளன. எனினும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அஞ்சலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய இடங்களில் அஞ்சலகங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, அஞ்சலக முகவர்களை உருவாக்குவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.

அஞ்சல முகவர்

இதன்படி அஞ்சல முகவர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் பயன்பெறலாம். இதில் இரண்டு வகையான முகவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

1.அஞ்சலகம் இல்லாத இடங்களை கண்டறிந்து அதில், விற்பனை பிரதிநிதிகள் மூலம் அஞ்சலக சேவை வழங்கப்படும்.

2. வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் தலைகள் மற்றும் அஞ்சலகப் பொருட்களை விற்பனை செய்யும் முகவர்கள்.

ஒப்பந்தம்

அஞ்சலகங்களில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அஞ்சல் துறை விண்ணப்பித்தவரை நேரடியாக அழைத்து விசாரணை செய்து அஞ்சல் துறையில் முகவராக கமிஷன் அடிப்படையில் சேவை செய்ய ஒப்பந்தம் போடப்படும். அதில் விற்பனைக்கு வழங்கப்படும் கமிஷன் குறித்த விபரங்கள் இடம்பெறும்.

வயது

18 வயது பூர்த்தியான அனைவரும் தகுதியுடையவர்கள். எனினும், உச்சபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னுரிமை

ஓய்வு பெற்ற தபால் அலுவலர்கள், கனினிமூலம்சேவை செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வெப்சைட் முகவரி

https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

கமிஷன்

தேர்வு செய்யப்படும் முகவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

தலா ஒரு ரெஜிஸ்டர் போஸ்ட் – ரூ.3

தலா ஒரு ஸ்பீட் போஸ்ட் – ரூ.3

ரூ.100 முதல் ரூ.200 வரையிலான மனி ஆர்டர் – ரூ.3.50

ரூ.200க்கும் மேற்பட்ட மனி ஆர்டர் – ரூ.5

அஞ்சலக தபால்தலைகள், மனி ஆர்டர் விண்ணப்பம்- 5% கமிஷன்

தேர்வு செய்யப்படும் முகவர்கள் பாதுகாப்பு வைப்பு தொகை 5 ஆயிரம் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments