- விநாயகர் சதுர்த்தி விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்நாளை ஆண்டுதோறும் விநாயகரின் பிறந்த நாளாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தி விழா மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் தேசிய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வந்தது.
- பின்னர் மகாராஷ்டிரா மக்களின் குடும்ப விழாவாக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் பீஷ்வால் ஆட்சி காலத்தில் விநாயகரை தங்கள் வீடுகளில் வைத்து வணங்க ஆரம்பித்தனர்.
- அதன் பின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் பொதுமக்களுடன் கலந்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முக்கிய காரணமாக இருந்தவர்.
தமிழ்நாட்டு மக்கள்
- தமிழ்நாட்டில் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி விழாவாகும். இவ்விழாவில் வீடுகள் மற்றும் கடைகளில் கால் அடி முதல் 70 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகளை செய்து தெருக்களில், வீடுகளில் வைத்து விநாயகரை வணங்கி வருகின்றனர்.
- பின்னர் மூன்றாம் நாள், ஐந்தாம் நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலையை கரைத்து விடுகின்றனர். கடைகள், வீடுகளில் சிறிய அளவிலான விநாயகரை வைத்து பூஜை செய்து கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்களை விநாயகருக்கு படைத்து மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது ஏன்
- அரக்கர்கள் செய்யும் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்ட காரணத்தால், சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகர்.
- அரக்கர்களை அழிக்க இவர் ஆவனி மாத சதுர்த்தியன்று மனித உடல், யானை முகத்தோடும் பிறந்தவர் விநாயகர்.
- கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டவர் விநாயகர். எனவே தான் இன்நாள் விநாயக சதுர்த்தி விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழா கர்நாடகா, கோவா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் 10 நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்க்கைப் பயணம்
- உலகில் மனிதன் என்று பிறந்தானோ அன்றே அவன் ஒருநாள் இவ்வுலகை விட்டுச் செல்வான் என்பது எழுதப்பட்ட விதி.
- பின் மண்ணோடு மண்ணாகி வாழ்வோம். இவ்வுலகில் யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை இந்த வாழ்க்கை ரகசியம் உணர்த்துகிறது.
எது நிரந்தரம் இல்லை
- பஞ்சபூதத்தில் ஒன்றான களிமண்ணால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகர். அதில் பிரதிஷ்டை பண்ணும் பொழுது தான் உயிர் உருவாகிறது.
- பின்னர் அவர் சக்தி அடைந்ததை நினைத்து வணங்குகிறோம். பின்னர் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என தெரிந்தும் பக்தி பரவசத்துடன் கொண்டாடி விநாயகரை வழி அனுப்புகிறோம்.
விநாயகரை தண்ணீரில் கரைக்கும் போது
- நீரில் விநாயகரை கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுகிறார்.
- விநாயகரை பஞ்ச பூதமான நீரில் கரைக்கும் போது மண்ணோடு மண்ணாக மாறிவிடுகிறார்.
அறிவியல் காரணி
- ஆடிப்பெருக்கன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் மணலை அடித்துச் சென்று விடும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஈரப்பதத்துடன் இருக்கும்.
- அன்றே செய்த ஈரமான விநாயகர் சிலையை ஏரி குளங்களில் கொண்டுபோய்க் கரைத்தால் மண்ணோடு மண்ணாக தங்காமல் நீரில் கரைந்து ஓடிவிடும்.
- இதனால் நீர் தேங்காமல் நீர் ஆதாரம் குறைந்து விடும். இதனால்தான் கெட்டியான களிமண்ணை கொண்டு செய்த பிள்ளையாரை மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாட்களில் ஏரி, குளங்களில் கொண்டுபோய் கரைத்தார்கள்.