ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் ச.கண்ணையா எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயி களுக்கு வழங்குவதற்காக இந்த மாதத்துக்கு 4,400 மெ.டன் யூரியா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 765 மெட்ரிக் டன் கிரிப்கோ யூரியா ராமநாதபுரத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வேளாண் இணை இயக்குநர் ச.கண்ணையா, துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன், உதவிஇயக்குநர் (தரக்கட்டுப்பாடு) நாகரா ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கூறியதாவது:
விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள் விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1,900 மெ.டன் யூரியா தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், 3,000 மெ.டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் வந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் யூரியா T2,613 மெ.டன், டிஏபி 1,908 மெ.டன், பொட்டாஷ் 103 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,956 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் விற்பனை நிலையம் மூலம் உரங்களைப்பெற்றுக்கொள்ளலாம். சில்லரை உர விற்பனையாளர்கள் ஒரே நப ருக்கு தேவைக்கு அதிகமான உரங்கள் விற்பனை செய்யக் கூடாது. விலைப் பட்டியல், உர இருப்பு விவரம், விவசாயிகளுக்கு தெரியும் வகையில் உரக்கடையில் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரம் விற்பனை குறித்த புகார் வந்தால் உர உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.