தமிழ்நாடு முதலமைச்சர் “கோவிட் 19” பெருந்தொற்று காரணமாக சுமார் ஏழு இலட்சம் தமிழர்கள் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பியுள்ளனர் என்பதால் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும் என்றும் இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்துள்ளார்.
திட்டத்தில் பயன்பெற தகுதி
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான நபர்கள் 01.01.2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி இருத்தல் வேண்டும்.
- வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.
- பொதுப்பிரிவினராக இருப்பின் 18 வயது முதல் 55 வயது வரையும் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச கல்விதகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேற்படி தகுதியுள்ளவர்கள் உற்பத்தி தொழிலுக்கு திட்ட மதிப்பீடு ரூ.15 இலட்சத்திற்கு மிகாமலும் சேவை மற்றும் வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு திட்டமதிப்பீடு ரூ.5 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அத்திட்டத்திற்காக வங்கிகடன் பெறும்பட்சத்தில் திட்டமதிப்பீடில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 இலட்சம் அரசு மானியம் வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் https://www.msmeonline.tn.gov.inஎன்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கைளை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், இராமநாதபுரம் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.